எட்டு வழி சாலை திட்டம்! அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் அளவில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எட்டு வழிச்சாலைக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கின்ற செம்மொழிப் பூங்காவில் ஆய்வுசெய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தெரிவித்ததாவது, சென்னையில் மக்கள் கூட்டம் மிகுந்து இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், இது போன்ற பூங்காக்கள் மிகவும் அவசியம் என்று தெரிவித்திருக்கிறார். தோட்டக்கலை மூலமாக 24 பூங்காக்கள் தமிழகம் முழுவதும் அமைந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட உழவர் சந்தைகள் பராமரிக்கப்படாமல் இருந்துவருகின்றன. அதனை சரியாக பராமரிப்பதுடன் 120க்கும் அதிகமான உழவர் சந்தைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.அதோடு ஆத்மா திட்டத்தில் வேலை செய்த வேளாண் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவது குறித்து துறை ரீதியாக ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்த அமைச்சர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, புதிய வேளாண் சட்டங்களை தடை செய்வது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும் முதல்வர் சொன்னதைச் செய்வார் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு எட்டுவழிச்சாலை மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர் இந்த ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம் அதனை முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என்று தெரிவித்திருக்கிறார்.