அணிக்காக அதை எம்.எஸ் தோனி தியாகம் செய்துள்ளார்!!! கவுதம் கம்பீர் புகழாரம்!!!

0
134
#image_title

அணிக்காக அதை எம்.எஸ் தோனி தியாகம் செய்துள்ளார்!!! கவுதம் கம்பீர் புகழாரம்!!!

இந்திய அணிக்காக விளையாடும் பொழுது இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக மகேந்திரசிங் தோனி கடைசி வரிசையில் இறங்கி பேட்டிங் செய்து தியாகம் செய்துள்ளார் என்று கவுதம் கம்பீர் அவர்கள் கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அவர்களும் இந்திய அணி 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். இவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி 97 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுதம் கம்பீர் எம்.எஸ். தோனி அவர்களை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த கவுதம் கம்பீர் அவர்கள் “ஒரு போட்டியின் திசையையும், போக்கையும் மாற்றக் கூடிய திறமை பெற்ற முதல் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் எம்.எஸ் தோனி அவர்கள் தான். எம்.எஸ் தோனி அவர்களை போன்று பலம் வாய்ந்த ஒரு வீரரை ஏழாவது இடத்தில் பெற்றது இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வரம் ஆகும்.

எம்.எஸ் தோனி அவர்கள் கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கிய பொழுது அவர் 3வதாக களமிறங்கி விளையாடி வந்தார். இதோ போல எம்.எஸ் தோனி அவர்கள் தொடர்ந்து 3வது இடத்தில் களமிறங்கி விளையாடி இருந்தால் பல சாதனைகளை சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தி இருப்பார். பல சாதனைகளை முறியடித்திருப்பார். பல சதங்களை அடித்திருப்பார்.

ஆனால் இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி அவர்கள் பொறுப்பேற்றார். அதன் பின்னர் 3வது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டிய எம்.எஸ் தோனி அவர்கள் 6வது, 7வது இடங்களில் களமிறங்கி விளையாடினார். இந்திய அணிக்காக தனது 3வது இடத்துக்கான பேட்டிங் வரிசையை எம்.எஸ் தோனி அவர்கள் தியாகம் செய்துள்ளார்” என்று கவுதம் கம்பீர் அவர்கள் கூறியுள்ளார்.

Previous article80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!!
Next articleபுதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!