ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி

0
243
லையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி
லையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி! 

ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரும், ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்க்கு, பிரம்மாண்டமான  சொகுசு வீடு ஒன்றை பரிசளித்துள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு வலது கரமாக உள்ளவர் மனோஜ் மோடி, இவர்கள் இருவரும் கல்லூரித் தோழர்களாவர். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி வசம் ரிலையன்ஸ் இருந்த போதே மனோஜ் மோடி அந்நிறுவனத்தில் சேர்த்துள்ளார்.

இவர் அம்பானி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார். அந்நிறுவனங்களின் பல கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தகளுக்கு மனோஜ் மோடி மூளையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானி, மனோஜ் மோடிக்கு மும்பை நேபியர் சாலையில் ஒரு பிரம்மாண்டமான சொகுசு பங்களாவை பரிசளித்துள்ளார்.

1.7 லட்சம் சதுர அடி பரப்பளவு மற்றும் 22 மாடிகளை  கொண்ட இந்த சொகுசு பங்களா வீடு ரூ 1500 கோடி மதிப்பு கொண்டது.

Previous articleமந்திரி பன்னா குப்தா பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம்! வெளியான அதிர்ச்சி திருப்பம் !
Next articleஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!