ஐந்து திரைப்படங்களில் பல விருதுகள்!! செய்தித்துறையில் இருந்து திரையுலகம் வரை இயக்குனர் ஜெயபாரதி!!

0
110
Multiple awards in five movies!! Director Jayabharathi from Journalism to Film Industry!!
Multiple awards in five movies!! Director Jayabharathi from Journalism to Film Industry!!

கடந்த 1979 ஆம் ஆண்டு க்ரவுட் ஃபண்டிங் (crowd funding) முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் ‘குடிசை’. இப்படத்தின் மூலம் அப்போது பிரபலமாகப் பேசப்பட்டவர் தான் இயக்குனர் ஜெயபாரதி.
1970 ஆம் ஆண்டு சினிமா படிப்பை முடித்துவிட்டு திரையுலகமே மெட்சும் சினிமாவை இயற்ற வேண்டும், என்ற இலட்சியத்தோடு சினிமா களத்தில் இறங்கினார் இவர்.

இவர் இயக்கிய படங்களுல் குடிசை படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
திரைத்துறைக்கு வரும் முன் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்தார். அங்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகளாவிய சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வந்தார்.இந்நிலையில் தான், இவருக்கு இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகம் கிடைத்தது.

கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் முதலில் இவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள்.இது குறித்து ஜெயபாரதியிடம் கேட்டபோது, “தனக்கு இயக்கத் துறையில் மட்டும் தான் ஆர்வம்” எனக் கூறி நடிக்க மறுத்துவிட்டார்.இதைத் தொடர்ந்து பல முயற்சிகளுக்குப் பிறகு ‘குடிசை’ திரைப்படம் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’, ‘குருஷேத்திரம்’ போன்றத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இவற்றுள் ‘நண்பா நண்பா’ படம் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்தத் துணை நடிகர் விருதைப் பெற்றது. மேலும் 2010 ஆம் ஆண்டு ‘புத்திரன்’ என்றப் படத்தை இயக்கினார்.இப்படத்துக்கு எனத் தமிழக அரசின் மூன்று விருதுகளைக் கைப்பற்றினார்.

திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் இருந்தார். இயக்குனர் ஜெயபாரதி, “இங்கே எதற்காக?” என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர்-06 ( இன்று ) காலை 6:00 மணி அளவில் உயிரிழந்தார்.

77 வயதான இயக்குனர் ஜெயபாரதி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் எழுத்தாளரான து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியோர் இவரது பெற்றோர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇனி இங்கேயும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!
Next articleஎன் கதையில் விஜய்சேதுபதி வேண்டவே வேண்டாம் என கூறிய நலன் குமாரசாமி!! காரணம் இதுதான் விளக்கும் தயாரிப்பாளர்!!