ஒரே பழத்தில் உடலுக்கு தேவையான இவ்வளவு சத்துக்களா?

Photo of author

By Pavithra

ஒரே பழத்தில் உடலுக்கு தேவையான இவ்வளவு சத்துக்களா?

Pavithra

நமது உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது அதிக பலனளிக்கும் என்று பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால் ஒரே பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கும் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? ஆம் அத்திப் பழத்தை சாப்பிடுவதனால் (athipalam benefits tamil) நம்முடைய உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் கிடைக்கும்.

பொதுவாக அத்திப்பழத்தை பெரும்பாலானோர் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அத்திப்பழம் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. ஆனால் உலர் அத்திப்பழம் அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது.இந்த அத்தி பழத்தை சாப்பிடுவதின் மூலம் என்னென்ன பயன்கள் என்பதை கீழே பார்ப்போம்.

அத்திப்பழம் நன்மைகள்:

இதில் அதிகம் நார்ச்சத்து உள்ளதால் தினமும் 3 துண்டு அத்திப்பழம்சாப்பிட்டு வருகையில் மலச்சிக்கல் நீங்கும்.

இந்த பழத்தில் குறைந்த கலோரிகள் இருப்பதால் வயிற்று தொப்பையை குறைக்க பயன்படுகிறது.

அத்திப்பழத்தை கட்டாயமாக மகப்பேறு பெண்கள் உட்கொள்ள வேண்டும்.ஏனெனில் இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புகள் வலுபெறும்.மற்றும் மகப்பேறுக்கு பின்பு வயிறு குண்டாவது குறையும்.

இதில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் சத்து குறைவாகவும் உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை சரிச்செய்யும்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிப்பதோடு ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சரிச்செய்வதால் இதயப் பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

அத்திபழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் குறைவதோடு தோல் சுருக்கத்தை தடுக்கவும் பயன்படுகிறது.

இதில் சிங்க் (Zinc)மற்றும் மெக்னீசிய சத்து அதிகம் உள்ளதால் ஆண்கள் இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்கள் வலு பெறுவதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.பெண்கள் இதனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கருமுட்டைகள் வலுபெறும்.