அதிகாலையில் நடந்த திடீர் தீவிபத்து; வணிக வளாக பொருட்கள் எரிந்து நாசம்!

Photo of author

By Jayachandiran

மும்பை போரிவலி பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிகவளாகத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 14 தீயணைப்பு வாகனத்தின் மூலம் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

இந்த தீவிபத்தில் வணிக அலுவல் கணக்குகள் தீயில் எரிந்து நாசமாகின. இருப்பினும் உயிரிழப்பு, பொருளிழப்பு பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. திடீர் தீவிபத்திற்கு மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த மாதம் தெற்கு மும்பை பகுதியில் பஹ்ரைன் வங்கி மற்றும் குவைத் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.