கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன?
கொரோனா நோய் தொற்று முன்பைவிட தற்சமயம் மிக வேகமாக பரவி வருகிறது அதன் காரணமாகவே ஒருநாளில் சுமார் இரண்டரை இலட்சம் அளவிற்கு இந்த நோயினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் இருந்து வருகிறார்கள்.
மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்றை தடுப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆனாலும் இந்த நோய்த்தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அதோடு இதற்கு முன்னர் இப்படி ஒரு நிலைமை பார்த்ததே இல்லை என்று தெரிவித்து இருக்கிறார் அந்த மருத்துவர்.
தொற்று நோய் பிரிவின் நிபுணராக இருந்து வரும் மருத்துவர் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி ஆக்சிசன் மற்றும் ரிசிவர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் இப்போது இருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்கள் எல்லோருமே மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்த அவர் கண்முன்னே நோயாளிகள் படும் துயரத்தை பார்த்தும் உதவ இயலாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இந்த தடுப்பூசியை பொறுத்தவரையில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த தொற்றின் பாதிப்பின் தீவிரம் மிகக் குறைவாகவே இருப்பதால் எல்லோரும் நிச்சயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.