வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பதால் இந்திய பங்குச்சந்தை இன்று உச்சத்தை தொட்டது.
மும்பை பங்கு சந்தையில் இன்று நண்பகலில் சென்செக்ஸ் குறியீடு 487 புள்ளிகளுக்கும் அதிகமானது. இது து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு திடீரென வரலாறு காணாத வகையில் 487.76 புள்ளிகள் உயர்வடைந்து 40,847.17 புள்ளிகளாக இருந்தது. குறிப்பாக
பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், வேதாந்தா, இன்டஸ்இன்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, மாருதி ஆகிய பங்குகள் நல்ல லாபத்தை பெற்றன.
அதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 136.80 புள்ளிகள் உயர்வடைந்து 12,051.20 புள்ளிகளாக இருந்தது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட கூடும் என கூறப்படுவதால் சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சம் அடைந்து உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.69 என்ற அளவில் இருப்பது பின்னடவைவாக கருதப்படுகிறது.