சேலம் மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் செய்த செயல்! மயக்கமடைந்த மேற்பார்வையாளர்!
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.மேலும் துப்புரவு பணியாளர்களுக்கென மேற்பார்வையாளர்கள் 4 பேர் இருகின்றர்கள். மேலும் நேற்று அந்தப் பகுதிகளை பார்வையிட நகராட்சி ஆணையர் வந்தார். அப்போது அவர் துப்புரவு பணியாளர்களிடம் உரையாடினார் அந்தந உரையாடலில் மேற்பார்வையாளர் மகேஸ்வரி மற்றும் வசந்த என்பவரை தரை குறைவாக பேசியதாகவும் அப்பகுதியில் இருந்தவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் துப்புரவு பணிக்காக ஊழியர்களை குறித்த நேரத்தில் பிரித்து அனுப்பாமல் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் மிக கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் நகராட்சி ஆணையர் அவ்வாறு பேசியதால் மனம் உடைந்த வசந்தா மயக்கமுற்று கீழே விழுந்தார். அதனை கண்ட சக உழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துப்புரவு பணியாளர்கள் இணைந்தவசந்த என்பவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நகராட்சி ஆணையர் செய்த செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி காணப்பட்டது. வசந்தா மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார்.