திராவிட இயக்கங்களுக்கு துக்ளக் குருமூர்த்தி வைத்த சூடு! கொதித்தெழுந்த முரசொலி நாளிதழ்!

0
82

முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய பின்னர் ஆற்றிய சுதந்திர தின உரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக 150 ஆண்டுகளுக்கு முன்பே போராடியது தமிழகம் தான் எனவும், தமிழகத்தின் இந்த பங்களிப்பை முழுமையாக நாம் தொகுத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பாராட்டி துக்ளக் நாளிதழ் எழுதி இருக்கிறது. ஆனால் இது பாராட்டு அல்ல விஷமம் என்று சொல்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலி.

முரசொலி நாளிதழில் தலையங்கத்தில் இதுதொடர்பாக எழுதப்பட்டிருக்கிறது. அதில் சிரிப்பிலேயே விஷமச் சிரிப்பு என ஒன்று இருக்கிறது அதை போலத்தான் பாட்டிலேயே புகழ்வது போலப் பழித்தல் இருக்கிறது. அப்படித்தான் புகழ்வது போல பழித்திருக்கிறார் குருமூர்த்தி முதலமைச்சரின் இந்த அறிவிப்பை குறிப்பிட்டு இது நம்முடைய நாடு சுதந்திரம் பெறுவதை எதிர்த்த திராவிட இயக்கத்தின் சிந்தனைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

அது தமிழ் நாட்டிற்கும், பாரத நாட்டிற்கும், மிக நன்று அதற்காக முதலில் ஸ்டாலினை நாம் பாராட்டுகின்றோம் என விஷமத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார் குருமூர்த்தி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது திராவிட இயக்கம் நாடு சுதந்திரம் அடைவதை எதிர்த்த கட்சி என்பதை முன்வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தானாக முன்வந்து முதலமைச்சரை பாராட்டி இருக்கின்றது துக்ளக் பத்திரிகை என்று தெரிவித்திருக்கிறது. எதைச்சொன்னாலும் தந்தை பெரியாரை மற்றும் பேரறிஞர் அண்ணாவை தமிழின தலைவர் கருணாநிதி திராவிட இயக்கத்தை குறை சொல்லாமல் அவர்களுக்கு தூக்கம் வராது அது போன்ற அறிவிப்பு ஆரியத் தன்மை அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது அந்த தலையங்கத்தில்.

திராவிட மக்களின் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் ஒரு தரப்பினரிடம் மட்டும் ஆட்சியை பிரிட்டிஷ்காரர்கள் படைத்ததை கண்டிக்கும் விதமாக தான் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாளை துக்க நாளாக கருதினார் பெரியார். இல்லை அது சுதந்திர நாள் தான் என்று தெரிவித்தார்.பேரறிஞர் அண்ணா இந்த விவகாரம் எதுவும் தெரியாமல் அல்லது தெரிந்தும் மறைப்பதற்காகவே துக்ளக் முயற்சி செய்கிறது. குருமூர்த்தி தன்னுடைய குருமார்கள் ஆன மன்னிப்பு திலகங்கள் மண்டியிட்டு கடந்த வரலாற்றை வாரம் முழுவதும் எழுத வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பி இருக்கின்றது முரசொலி.

முதலமைச்சர் ஸ்டாலினின் முழு உரையையும் படித்திருந்தால் குருமூர்த்தி இவ்வாறு ஒரு கட்டுரையை எழுதி இருக்கமாட்டார். சீன படையெடுப்பின் போது நாட்டிற்காக அறிஞர் அண்ணா நின்றதும், பாகிஸ்தான் நாட்டின் போரின்போது நாட்டைக் காக்க முதலமைச்சர் கருணாநிதி நின்றதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார் அந்த உரையில் நாடு காக்க போரிட்ட மாணவர்களின் வீரத்தைப் போற்றுவோம் அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் 1967ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கின்றது அந்த முரசொலியின் தலையங்கம்.

பரணி சு நெல்லையப்பர் ஆக இருந்தாலும் நாமக்கல் கவிஞராக இருந்தாலும், அவர்களை போற்றியது திமுக அரசுதான் இன்றும் வா உ சி சிதம்பரனார் புகழை போற்றுவது திமுக அரசு அதனை எல்லாம் மறைப்பதற்காக திராவிட இயக்கங்கள் சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்து போல ஒரு பொய் வரலாறு படைப்பதே ஒருசிலருக்கு வழக்கமாக இருக்கிறது இப்படித்தான் சில தினங்களுக்கு முன்னர் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கட்சி ஆட்சி கண்டிக்கவில்லை என்று தினமணியில் வைத்தியநாதன் எழுதியிருந்தார். அந்த சமயத்தில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வரவில்லை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுபவீரபாண்டியன் மறுப்பு தெரிவித்த உடன் மன்னிப்பு கேட்டு வைத்தியநாதன் இது வழக்கமான ஒன்றுதான் என்று சொல்கிறது முரசொலி.

மத்திய சட்டசபையில் மாவீரன் பகத்சிங் புது கேஸ்வரர் ஆகிய 2 பேரும் குண்டு வீசிய சமையத்தில் முழு மூட சிகாமணிகள் என்று பட்டம் தந்தது அன்றைய ஆனந்தவிகடன். உலக மக்களுக்கு உண்மையான சமத்துவத்தை காட்டியவர் பகத்சிங் என்று 1931இல் எழுதியிருந்தது. பெரியாரின் குடியரசு ஆகவே துக்ளக் தன்னுடைய வெங்காய வரலாறுகளை வேறு பக்கமாக பொரித்துக் கொள்ளலாம் என்று கடுமையாக கண்டித்து இருக்கிறது முரசொலி நாளிதழ்.நாடு விடுதலை ஆவதில் திராவிடர் இயக்கத்தின் பங்கு என்ன என்பதை தெளிவாக இந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தாலும் கூட நாடு விடுதலை ஆன பின்னர் இந்த திராவிட இயக்கங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக என்னென்ன தகிடுதத்தம் வேலைகளை செய்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

அந்த ஆண்டவனுக்கு எல்லாம் தெரியும் என்ற காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை இந்த திராவிட இயக்கங்களுக்கு ஆண்டவன் என்றாலே பிடிப்பதில்லை கடவுள் மறுப்புக் கொள்கை என்ற ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு அதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றி சுற்றித் திரியும் ஒரு கயவர் கூட்டமாக தான் இந்த திராவிடர் இயக்கக் கூட்டம் இருக்கின்றது. ஒருபுறம் இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசிவிட்டு மறுபுறம் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டு அதன் மூலமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அப்போது திராவிட இயக்கங்கள் முயற்சி செய்யும் அது பாமர மக்களுக்கு தெரியவில்லை அதன் காரணமாக, இவர்கள் ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக தங்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வார்கள்.

இந்துக்கள் பரந்து விரிந்து இருக்கும் இந்த தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திராவிட இயக்கங்களாக தான் இருக்கும் என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஒரே ஒரு ஓட்டுக்காக ஒட்டுமொத்த இந்து சமுதாய மக்களையும் கொச்சைப்படுத்தும் புத்தி உள்ள ஒரே இயக்கம் திராவிடர் இயக்கங்கள் தான் என்று சொல்லப்படுகிறது.

பெரியார் அவர் காலங்களில் பல்வேறு பகுத்தறிவு சிந்தனைகளை பொதுமக்களிடம் காலூன்ற வேண்டும் என நினைத்து இருந்தாலும் அவர் கடைசி வரையில் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றினார் முழுக்க ,முழுக்க அவரை பின்தொடர்ந்து வந்த திராவிட இயக்கங்களால் அந்தக் கொள்கையில் இருந்து சற்றும் மாறுபட முடியவில்லை. அப்படி ஒருவேளை மாறுபட்டால் அவர்களின் சித்தாந்தங்கள் உடைபட்டு அவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக தான் தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் இந்துக்களை சீண்டிப் பார்க்கின்றது இந்த திராவிட இயக்கங்கள்.இன்னும் சொல்லப்போனால் திராவிடர்கள் என்று சொன்னால் தெலுங்கர்கள் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.அதோடு இன்னும் ஒரு சிலர் கருணாநிதி தமிழரே கிடையாது அவர் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்று தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.