சின்னத்திரை நடிகை சித்ராவின் கொலை வழக்கு ஹேம்நாத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை!

Photo of author

By Sakthi

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களின் தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்களுக்கு எதிராக நசரத்பேட்டை காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது.

பிரபல சின்னத்திரை நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சித்ரா சமீபத்தில் சென்னை நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது . அவர் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஹேம்நாத் என்பவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து இது குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு நிலையில், நசரத்பேட்டை காவல்துறையும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ அவர்களும் தனித்தனியே தங்களுடைய விசாரணையை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில், தன்னுடைய விசாரணையை நடத்தத் தொடங்கிய நசரத்பேட்டை காவல்துறையினர் இன்றைய தினம் சித்ராவின் கணவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், நடிகை சித்ராவின் கணவர் சந்தேகித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .இந்த நிலையில் நடிகை சித்ராவின் பெற்றோர் சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த ஒரு தடையாமோ அல்லது காயமோ அவருடைய கழுத்தில் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடிகை சித்ராவின் வழக்கை கையில் எடுத்து இருக்கிறார்கள். ஆகவே சென்னை உயர் நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.