முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்!

Photo of author

By Hasini

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்!

Hasini

Murder due to prejudice! Surrendered killers!

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்!

சேலம் மாவட்டத்தில் பெரிய சோரகை அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோர் பெரிய சோரகை பொன்னப்பன் காலனியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி பொன்னப்பன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஒருவர் பணத்தை எடுத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், குக்கர் மூடியை எடுத்து கிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கிருஷ்ணன் அங்கேயே நிலை தடுமாறி, ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடலை பெட்ஷீட்டில் சுற்றி அருகிலுள்ள ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் வீசிவிட்டு வெங்கடேசன் மற்றும் மணிகண்டன் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுவிட்டனர். அதன் பின் தாங்கள் கொலையாளிகள் என்ற தகவலை கூறி போலீஸ் நிலையத்தில் இரண்டு பேரும் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி கிணற்றில் கிடந்த கிருஷ்ணன் உடலை போலீசார் மீட்டனர். இது குறித்து அவர்களிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.