பாதாம் பிசின் விட பவர்ஃபுல் கொண்ட முருங்கை பிசின்..!! உடல் எடை குறைய இதை ட்ரை பண்ணுங்க..!!

Photo of author

By Priya

Murungai Pisin tamil: அனைவருக்கும் எளிமையாக கிடைக்க கூடிய கீரைகளில் ஒன்று தான் இந்த முருங்கைக்கீரை. முருங்கைக் கீரை, முருங்கை பூ, முருங்கைக்காய் ஆகியவை மிகவும் சத்து நிறைந்ததுஎன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். முருங்கைக்கீரையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை உள்ளவர்கள் இதனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ரத்தசோகை பிரச்சனை ஏற்படாது. முருங்கைக் கீரையை அல்லது முருங்கைப்பூ, முருங்கைக்காயை கூட்டாகவோ, பொரியலாகவோ, அல்லது குழம்பு வைத்தோ, சூப் செய்தோ குடித்து வர உடலுக்கு வலிமை பெருகும்.

மருத்துவ பயன்கள் கொண்ட இந்த முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் கீரை, பூ, காய் என அனைத்தும் உடலுக்கு சத்து கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் உடலுக்கு பலவகையான நோய்களை தீர்க்கக்கூடிய மருந்தாக உள்ளது. அதனைப் பற்றி இந்த பதிவில் (Murungai Maram pisin) பார்க்கலாம்.

முங்கை பிசின் பயன்கள்

முருங்கை பிசின் முருங்கை மரத்திலிருந்து வெளியில் வரக்கூடிய ஒரு ஈரத்தன்மை கொண்ட பிசினாக காணப்படும். இது முருங்கை மரத்தில் அதிகப்படியான கால்சியம், சுண்ணாம்பு, நார்ச்சத்து இவை அனைத்தும் முருங்கை மரத்தில் அதிகம் இருப்பதால் முருங்கை மரம் பிசினாக வெளியேற்றுகிறது. ஆனால் இதனை கழிவு என்று நினைத்து ஒதுக்கி விட வேண்டாம். முருங்கை பிசினில் அவ்வளவு மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.

முருங்கை பிசின் ஆரம்பத்தில் பிசுபிசுப்பாக நீர் தன்மையுடன் காணப்பட்டாலும், நாட்கள் செல்ல செல்ல இறுகி கடின தன்மையாக மாறிவிடும்.

இந்த முருங்கை பிசின் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முருங்கை பிசினை முதல் நாள் இரவு ஊற வைத்துவிட்டு அல்லது அதிகாலையில் எழுந்து இந்த முருங்கை பிசினை ஊற வைத்து உடற்பயிற்சி செய்துவிட்டு இந்த பிசின் ஊற வைத்த நீரை அருந்திவிட்டு அதில் உள்ள பிசினை சாப்பிட்டு விட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

மேலும் முருங்கை பிசின் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த முருங்கை பிசினை ஊற வைத்து அடிக்கடி சாப்பிட்டு வர மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

காது வலி உள்ளவர்கள் இந்த பிசினை எடுத்து கரைத்து ஒரு சொட்டு வலி உள்ள காதில் விட்டால் காது வலி உடனே நின்று விடும்.

முருங்கை பிசினை பொடி செய்து சிறிதளவு பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டு தன்மை நீங்கும்.

மேலும் சிறுநீர் பிரச்சினை உள்ளவர்கள் ஆஸ்துமா உள்ளவர்கள் முருங்கை பிசினை பொடி செய்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க: Ranakalli Ilai: கட்டிப்போட்டால் குட்டி போடும்… கிட்னியில் உள்ள கல்லை நீக்க இந்த ஒரு செடி போதும்..!!