புதுமைகளை விரும்பும் இசைஞானி.. அப்பொழுதே பயன்படுத்தப்பட்ட புதிய டெக்னிக்!! சுவாரசியங்களை பகிர்ந்த காவிய வாலி!!
இளையராஜா அவர்கள் அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதில் அவர் கிராமிய இசையை அதிகமாக பயன்படுத்தினார். இது மக்களை மிகவும் கவரும் வண்ணத்தில் இருந்தது. மேலும் அவர் இசையில் பல புதுமைகளை
சேர்க்க விரும்பினார் அவர் அடுத்தடுத்து இசை அமைத்த படங்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்தினார். அப்படி அவர் இசை அமைத்த சிட்டுகுருவி என்ற படத்தின் பாடல் ஒன்றில் கவுண்டர்பாயின்ட் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.
இது எதிர்முனை, இசை அமைப்பில் வெவ்வேறு மெல்லிசை வரிகளை இணைக்கும் கலை. இது மேற்கத்திய இசை நடைமுறையின் சிறப்பியல்பு கூறுகளில் ஒன்றாகும். இதில் ஹார்மோனி என்ற அம்சத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும். இதற்கு கவிஞர் வாலியை பாடல் வரிகள் எழுத அழைத்தார்.பிறகு இளையராஜா டியூன் போட அதை கேட்ட வாலி அவர்கள் வரிகளை எழுத ஆரம்பித்தார்.
பாடல் வரிகள் என் கண்மணி இளமாங்கனி சிறிக்கின்றதேன் என்று ஆரம்பிக்கும். இதை ஆணும் பெண்ணும் மாறி மாறி பாடுவார்கள். இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களும் மிக பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இளையராஜா அவர்கள் கழுகு படத்தில் ஒபெனிங்ல் தீம் மியூசிக் வரும் அது ஹாரர் ஸ்டைலில் இருக்கும் அதில் பல இன்ஸ்ட்ருமென்ட்களை பயன்படுத்துவார் அது அப்போதைய கால கட்டத்தில் யாரும் பயன்படுத்தாத முறையில் இருக்கும்.
[5:18 PM, 7/8/2024] 🙂: https://tamilminutes.com/actor-sivaji-ganesan-and-his-last-remarkable-words/#google_vignette