உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅதில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இது தெரியாமல் பல மாநிலங்களில் இருந்து வந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரால் பலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரேந்தர்சிங் கொரோனா அச்சுறுத்தலால் இஸ்லாமியர்களின் மத ரீதியான ஒன்று கூடல்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளார். மேலும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டாரை தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்று கூறினார்.
நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசு கண்டிப்பு காட்டி வரும் நிலையில், இந்த அறிவிப்பு பஞ்சாப்பில் உள்ள அம்மதத்தவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.