தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வர வேண்டியதே! இத்தனை கோடியா?
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வரவேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதெல்லாம் உண்மைக்கு மாறான செய்தி என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 60 ஆயிரத்துக்கும் மேல் மின்நுகர்வோர், மின்சார கட்டணத்தை முறையாக செலுத்துவது இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே சமயத்தில் 47 கோடி மின்சார பாரியத்துக்கு வரவேண்டிய காட்டன் தொகை இருப்பதாக தகவல் கூறுகின்றன.
அதிகபட்சமாக கோவை வட்டாரத்தில் சராசரியாக 21 கோடியே 13 லட்சத்து ரூபாய் எனவும் இரண்டாவதாக காஞ்சிபுரம் வட்டாரத்தில் 24 ஆயிரம் மின் நுகர்வோர் சராசரியாக 11 கோடியே 86 லட்சம் ரூபாயும் செலுத்தாமல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது.
என மின்சாரத்தை செலுத்தாமலே பலரும் இருப்பதாகவும் கோடிக்கணக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வரவேண்டிய தொகை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் தமிழக அரசு இதுகுறித்து கண்டிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
“மின்சார சிக்கனம் தேவை இக்கணம்” என்று விளம்பர செய்யும் தமிழக அரசு மின்சாரத்தின் விரயம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் பொதுமக்களிடம் மின்சார கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் வணிக வளாகங்கள், பெரும் நிறுவனங்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகளில் வசிப்போர், நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களிடம் கரராக மின் கட்டண கட்டணமர, அதுவும் அதிகம் வசூலிப்பதாகவும், பெரு நிறுவனங்கள், வணிக வழக்குகளில் சலுகைகள் காட்டப்படுவதாகவும் சிலர் புகார் கூறி வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியம் இதுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.