நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க!

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க!

நீட் தேர்வு வந்தது முதல் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது. முன்பெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் பெறுவோர் அனைவருக்கும் மருத்துவ சீட்டு கிடைத்துவிடும். குறிப்பாக பாமர மக்களுடைய குழந்தைகளின் கனவு பெரும்பான்மையாக மருத்துவராக ஆக வேண்டும் என்பதாகவே இருக்கும். கிராமப்புறங்களில் போதுமான அளவு வசதி இன்றி படித்து வரும் மாணவர்களின் கணவும் இவ்வாறு இருக்கும். ஆனால் அவர்களின் கனவு கலைந்து போகும் வகையில் இந்த நீட் தேர்வை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

தற்பொழுதெல்லாம் வசதி அதிகமாக இருக்கும் மக்கள் தங்களது பிள்ளைகளை கோச்சிங் சென்டர் க்கு அனுப்பி நீட் தேர்வில் தேர்ச்சி அடைய செய்து விடுகின்றனர்.அவர்களைப்போல பாமர மக்களின் குழந்தைகளை கோச்சிங் சென்டர் அனுப்பி படிக்க வைக்கும் அளவிற்கு வசதி இல்லை.அதனால்  பாமர மக்களின் குழந்தைகள் கனவு கனவுகளாகவே சிதைகிறது.அரசாங்கம் நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளித்தாலும் அது மாணவர்கள் தேர்ச்சி பெரும் வகையில் இருப்பது இல்லை.இதனால் தமிழகத்தில் வருடந்தோறும் பல உயிரிழப்புகளும் நடக்கின்றது. நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல், வேதனையில் ஆண்டுதோறும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் உச்சநீதிமன்றத்தில் மருத்துவ படிப்பிற்கான வயது வரம்பை நீடிக்குமாறு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அந்த மனுவை விசாரித்து 25 வயதிற்கு மேற்பட்டோர் ,பொதுப்பிரிவினர் நீட் தேர்வை எழுதலாம் என கூறி இடைக்கால உத்தரவை போட்டது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது மருத்துவ ஆணையரகம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு கிடையாது என கூறியுள்ளது.கொரோனா தொற்றின் இழப்பிற்கு பிறகு மருத்துவர்களின் தேவை அதிகரித்துவிட்டது. அதனை ஈடுகட்ட இவ்வாறு உத்தரவை அமல்படுத்தியதாக கூறுகின்றனர்.

Leave a Comment