பள்ளி மாணவர்கள் தமிழில் மட்டுமே இனிஷியல் மற்றும் கையொப்பம் உள்ளிட்டவற்றை இடவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்திருந்த உத்தரவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், உள்ளிட்ட எல்லோரும் தங்களுடைய இனிஷியல் மற்றும் பெயரை தமிழில் தான் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் தமிழில் தான் இனிசியலை எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல கையொப்பத்தையும் தமிழில் தான் இட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு வருகை பதிவேடு போன்றவற்றிலும் மாணவர்களின் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.