இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்!

0
78

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்!

அனைத்து நகரங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் பீகார் தலைநகரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தை கலைப்பதற்காக போலீசார்கள் தடியடி நடத்தினார்கள். மற்றும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முடியாததால் அவர்களின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போராட்ட காரர் ஒருவர் மீது லத்தியை கொண்டு தாக்குதல் நடத்தினார்.அவர் அவரை கொடூரமாக தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வந்தது. மேலும் அந்த தாக்குதலில் போராட்ட காரர் சாலையில் உருண்டு புரளும் வீடியோ காட்சியில் போராட்ட காரர் தலையில் தேசிய கொடி கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி  தாக்குதல் நடத்திய அதிகாரி மீது  விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து  அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போரட்டகரார் மீது எதற்காக தடியடி தாக்குதல் நடத்தினர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்  உரிய தண்டனை வழங்க படும் எனவும் கூறினார்.

author avatar
Parthipan K