மக்களவையில் ஆதரவு! மாநிலங்களவையில் எதிர்ப்பு! அதிமுக நிலைபாடு முத்தலாக் நிறைவேற்றம்.
கடந்த நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் இயற்ற மாநிலங்கள் அவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிஜேபி மோடி அரசிடம் பெரும்பான்மை இல்லாததால் அச்சட்டம் நிறைவேற்றாமல் இருந்தது. அதே மசோதாவை இன்றைய நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, மாநிலங்களவையிலும் இம்மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்ததை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் இம்மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, மாநிலங்களவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக, திமுகவை தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.
தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவைக்கே வராத நிலையில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், முத்தலாக் தடை மசோதாவை, நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என விவாதத்தின்போது வலியுறுத்தினர்.
இதையடுத்து, இம்மசோதாவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் நடை பெற்றது. தேர்வு குழுவுக்கு அனுப்ப 84 பேர் ஆதராகவும், 99 எம்.பி.,க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.
அதாவது முத்தலாக் தடை மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பாமலேயே, மாநிலங்களவையில் நிறைவேற்ற ஆதரவாக 99 பேரும், இதனை எதிர்த்து 84 எம்.பி.,க்களும் வாக்களித்தனர். இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின் மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை சட்ட மசோதா இன்று நிறைவேறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தீவிர முயற்சியில் இதை நிறைவேற்றியுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.