கே எல் ராகுலுக்கு எச்சரிக்கை !! ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்காட் போலண்ட்!!

Photo of author

By Vijay

 கே எல் ராகுலுக்கு எச்சரிக்கை !! ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்காட் போலண்ட்!!

Vijay

My aim is to try to put pressure on KL Rahul

Cricket:  கே எல் ராகுல் இந்திய ஏ அணியில் விளையாட உள்ளார் அவருக்கு அழுத்தம் கொடுக்க காத்திருக்கிறேன் என்று கூறினார் ஆஸ்திரேலியா வீரர் ஸ்காட் போலண்ட் .

இந்தியா-நியூசிலாந்து இடையிலான போட்டியில் தோல்விக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணி இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் இடம்பெற்றிருந்தார். அதற்கு காரணம் சுப்மன் கில் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை அதனால் அதற்கு பதிலாக கே எல் ராகுல் அணியில் முதல் போட்டியில் விளையாடினார்.

முதல் போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட வில்லை. இந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் 0-3 என்ற நிலையில் படுதோல்வியடைந்தது. இதனால் அடுத்து தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா போட்டி தொடங்கும் முன் பயிற்சி ஆட்டத்திற்காக கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் நேற்று  ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டனர். அங்கு சென்று இந்திய ஏ அணியில் சேர்ந்து விளையாட அறிவித்தது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் கூறுகையில் கே எல் ராகுல் ஒரு மிக சிறந்த வீரர் ஒரு முறை அவருக்கு எதிராக நான் பந்து வீசியுள்ளேன். இந்த முறையும் அவருக்கு எதிராக பந்து வீசி அவருக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.