என் மன இறுக்கம் குறைந்தது! இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

0
225
My autism is low! They will take care of it now!
My autism is low! They will take care of it now!

என் மன இறுக்கம் குறைந்தது! இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் மறைமுகமாக ஆட்சி புரிந்த நபரும் தான் சசிகலா. இவரும் மறைந்த முன்னாள் முதல்வரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இணைந்தே அனைத்து விஷயங்களிலும் பங்கெடுத்தவர்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இருவருக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அனைவரும் அறிந்ததே.

அதே போல் ஊழல் வழக்கில் கூட இருவருக்கும் ஒன்றாகத்தான் தீர்ப்பு வழங்கினார்கள். அந்த அளவுக்கு தொடர்ந்த நெருக்கம் தொடர்ந்த நிலையில் திடீரென முதல்வர் கவலைக்கிடமான நிலையில் இருந்து இறந்து விட்டார். அதன் காரணமாக அதிமுகவின் அனைத்து தலைமை பொறுப்புகள் மற்றும் பல்வேறு விஷயங்களில் பெரும் மாற்றங்களை தமிழக மக்கள் கண்டனர்.

மறைந்த முதல்வரை அடுத்து இவர் தான் ஆட்சி செய்வார் என்று நினைத்த வேளையில் இவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது முதல்வரின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விட்டு சென்றார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்தார். இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு பல்வேறு தரரப்பில் பிரிந்து சென்றார்கள். அதன்பிறகு இரட்டை தலைமையில் அதிமுக கட்சி வழிநடத்தப்பட்டது.

தற்போது நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் ஆட்சிப் பொறுப்பை திமுக பெற்று விட்டது. தற்போது சசிகலா சிறையில் இருந்து வந்ததிலிருந்தே பல்வேறு ஆடியோக்கள் வெளியாகி மக்களிடையே பல பரபரப்புகளை ஏற்படுத்தி வந்தது. மேலும் அவர் எல்லா ஆடியோக்களிலும் குறிப்பாக நான் மீண்டும் வருவேன். உங்களைக் காப்பேன். கட்சியை கை விட மாட்டேன். மேலும் மக்களை நான் பொறுப்பாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இவரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார் போன்ற சில முக்கிய தலைவர்கள் மட்டுமே எதிர்த்த நிலையில், தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இவர் எந்த கட்சியில் கை கோர்ப்பார் அல்லது யாருடன் கூட்டு செய்வார் என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வம்ந்த பிறகு இது வரை ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு கூட செல்லவில்லை என்றும் ஒரு புறம் பேச்சு எழுந்தது.

இன்று அவர் திடீரென அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஒரு வழியாக இந்த நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என்று கூறியதோடு, அதிமுகவையும் தொண்டர்களையும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இணைந்து காப்பாற்றுவார்கள் என நம்புவதாகவும் கூறினார்.

மேலும் நான் இந்த நினைவிடத்திற்கு வந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும் என்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருமே தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர் என்றும் அவர்களுக்கு தற்போது புகழாரம் சூட்டினார். இவர் மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Previous articleபழிவாங்க நினைத்து மகன்களுக்கு பதில் தந்தையை வெட்டிய கும்பல்! வசமாக போலீசாரிடம் சிக்கிய சம்பவம்!
Next articleமனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்