என் பையன் தான் இதற்கு சரிப்பட்டு வருவான்.. உதயநிதிக்கு வரும் முக்கிய பொறுப்பு!! ஸ்டாலின் கொடுக்கும் டிவிஸ்ட்!!

Photo of author

By Rupa

என் பையன் தான் இதற்கு சரிப்பட்டு வருவான்.. உதயநிதிக்கு வரும் முக்கிய பொறுப்பு!! ஸ்டாலின் கொடுக்கும் டிவிஸ்ட்!!

Rupa

My boy is the one who will adjust to this.. The main responsibility will come to Udayanidhi!! Stalin's twist!!

DMK: 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி பிடித்து விட வேண்டுமென முனைப்புடன் ஸ்டாலின் இருந்து வருகிறார். அதனால் திமுகவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் அனைத்தையும் மாற்றி வருகிறார். அதன் பொருட்டு, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்தது தான். முக்கிய இரு அமைச்சர்கள் அதாவது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவர் மீதும் ஊழல் வழக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை சந்திக்காமல் இருக்க அமைச்சரவையிலிருந்து இவர்களை வெளியேற்றியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் பெரும்வாரியாக வெற்றி பெற முடிந்தாலும், கொங்கு மண்டலத்தில் இவர்களின் பாட்ஷா எடுபடவில்லை. 67 தொகுதிகளில் திமுக கூட்டணி 24 இடங்களில் மட்டுமே வெற்றியை கண்டது. அதிலும் கோயம்புத்தூர் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக தான் மெஜாரிட்டியாக இருந்தது. இம்முறை அதனை மாற்றியமைக்க அதிகார தன்மையுடன் உள்ள ஒருவரை இறக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை திட்டம் தீட்டியுள்ளது. அதற்கு சரியான ஆள் உதயநிதி ஸ்டாலின் தான் என்று ஸ்டாலினிடம் பலரும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

ஸ்டாலினுக்கும் அது தான் சரி என எண்ணியுள்ளார். இதனால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டல பொறுப்பாளராக உதயநிதியை அமர்த்தப்படலாம். கடந்த மக்களவைத் தேர்தல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என அனைத்திலும் களத்தில் இறங்கி திமுக கூட்டணியில் செந்தில் பாலாஜி நன்றாக வேலை புரிந்தார். இதனால் அதன் வெற்றியையும் பார்க்க முடிந்தது. ஆனால் இம்முறை இவர்களின் வழக்கால் மீண்டும் அமைச்சரவைக்குள் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் உதயநிதியை நிறுத்தலாம் என்று ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சி அதிருப்தியாளர்கள், தேர்தல் வியூகம் கணக்கெடுத்து நடைமுறைப்படுத்துவது வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது பல சவால்களை உதயநிதி சந்திக்க நேரிடும். இதை வைத்தே அவரது அரசியல் வழிநடத்தும்  முறையை கண்டு கொள்ளலாம்.