இந்த மாஸ்டர் பிளானுக்கு என் மகளும் உடந்தை.. திமுக மஸ்தான் கொலை வழக்கில் அடுத்தடுத்த பரபரப்பு!!

Photo of author

By Rupa

இந்த மாஸ்டர் பிளானுக்கு என் மகளும் உடந்தை.. திமுக மஸ்தான் கொலை வழக்கில் அடுத்தடுத்த பரபரப்பு!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் திமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக இருந்த மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி வெளிவந்தத நிலையில், அவரது முகத்தில் காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கக்கூடும் என்ற பாணியில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இவர் உயிரிழந்தது தொடர்பாக உயிரிழந்த மஸ்தானின் கார் டிரைவராக இருந்த அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா மற்றும் பலரை விசாரணையின் பெயரில் கைது செய்தனர்.

அவ்வாறு விசாரணை செய்த பொழுது தம்பி மருமகன் ரூ.15 லட்சம் ரூபாயை மஸ்தான் இடமிருந்து கடனாக பெற்றதாகவும், அதனை திருப்பி தராததால் தொடர்ந்து மஸ்தான் கேட்டு தொல்லை செய்து வந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம் என்ற உண்மை அம்பலமானது.

யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் அவரை மூச்சு திணற வைத்து கொலை செய்ய திட்டமிட்டு, எவ்வாறு மூச்சு அடைத்து கொலை செய்ய வேண்டும் என்பதையும்  அவரது தம்பியின் மருமகன் இணையத்தில் செல்போன் மூலம் தேடியது அடுத்தடுத்து போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவரது தம்பி கௌசே ஆதம் பாட்ஷாவும் கைது செய்யப்பட்ட நிலையில், இவரும் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. ஏனென்றால் இவரிடமும் ஐந்து லட்சத்தை மஸ்தான் வழங்கியதாகவும் அதனை கேட்டு வந்ததால் இவரும் அந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கொலையின் மற்றொரு கூட்டாளியாக அவர் தம்பி மகள் உள்ளது தற்பொழுது விசாரணையில் வெளிவந்துள்ளது. மஸ்தான் தம்பியை விசாரிக்கும் பொழுது, தனக்கு மேலும் இந்த கொலையில் உதவியது எனது மகள் ஹரிதா ஷஹீனா தான் என கூறியுள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததின் பெயரில் தம்பி, தம்பி மருமகன், மகள் என ஏழு பேர் தற்பொழுது வரை கைது செய்யப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.