என் காதலி மறுஜென்மம் எடுத்துள்ளார்! குடித்தனம் பண்ண வேற எதுவுமே கிடைக்கலையா?

Photo of author

By Kowsalya

என் காதலி மறுஜென்மம் எடுத்துள்ளார்! குடித்தனம் பண்ண வேற எதுவுமே கிடைக்கலையா?

Kowsalya

தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது காதலி தான் மறுஜென்மம் எடுத்து உள்ளார் என பாம்பை மணந்து குடித்தனம் செய்து வரும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே ஒரு பந்தபாசம் இருப்பது உண்மைதான். ஆடு மாடு கோழிகள் என பாசத்துடன் வளர்த்து வருகின்றனர்.

ஆனால் தாய்லாந்தில் பாம்புடன் குடித்தனம் செய்து அவர்தான் தன் காதலி என்றும் நம்பி அந்த பாம்புடன் வாழ்ந்து வருவது அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் அது ஒரு விஷத்தன்மை வாய்ந்த பாம்பு என்றும் சொல்லப்படுகிறது.

அந்தப் பாம்பை அவர் திருமணமும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 வருடத்திற்கு முன் தனது காதலி இறந்து விட்டதாகவும் அதன்பின் அந்த பாம்பை கண்டு தனது காதலி தான் மறுபிறவி எடுத்துள்ளார் என நினைத்து அதனை மணந்து வாழ்ந்து வருகிறாராம்.

இந்தப் பாம்பு அவருக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் அவருடன் வாழ்ந்து வருகிறது. திருமணம் செய்ததில் இருந்து அந்த இளைஞன் அந்த பாம்புடன் தான் தூங்குகிறார் மற்றும் அந்த பாம்புடன் தான் சாப்பிடுகிறார்.

இது கூட பரவாயில்லை அந்த பாம்புடன் இவர் சுற்றுலா சென்றுள்ளார் என்பது தான் நம்ப முடியவில்லை. இவர்கள் சுற்றுலா சென்றபோது தனிப்பட்ட ஜோடிகளின் புகைப்படத்தை இவரது நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

எந்த தீங்கும் செய்யாமல் அந்த மனிதன் உடன் அந்த நச்சுப்பாம்பு வாழ்ந்து வருவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆச்சரியமாகவும் உள்ளது.