என் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியாது! குழந்தைகள் குறித்து ஓப்பனாக பேசிய நமீதா!

0
25
Namitha
Namitha

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவரை பார்ப்பதற்காகவே இவர் நடிக்கும் படங்கள் மொக்கையாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்தவர்கள் ஏராளம். பின்னர் ஒரு பிரபல தொழிலதிபரை நமீதா திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார்.

தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் இவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது தனது இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவருடைய குழந்தைகளுக்கு அவர் இதுவரை ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்க வில்லையாம். தனது குழந்தைகளிடம் எப்போதும் ஆங்கிலத்தில் பேசமாட்டாராம். தமிழ், தெலுங்கு, குஜராத்தி தான் நமிதாவின் குழந்தைகளுக்கு தெரியுமாம். இந்த மொழிகள் தான் அவர்களின் தாய் மொழி. ஆங்கிலத்தை டிவியில் பார்த்தோ அல்லது வேறு எங்காவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். என் பிள்ளைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி எல்லாம் தெரியாது. ஜெய் ஹனுமான் தான் அவர்களுக்கு தெரியும் என்று பெருமையாக சொல்வேன் என பேட்டி கொடுத்துள்ளார் நமீதா.

Previous articleதிட்டத்தை தொடங்கி வைத்த மூன்றே நாட்களில் இயந்திரம் பழுதான அவலம்! எல்லாம் நம்ம ஊருலதான்!
Next article2 தொகுதி கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி வச்சுப்பீங்களா? திருமாவை கலாய்த்து தள்ளிய நயினார் நாகேந்திரன்!