4 ஆண்டுகளாக என்னுடைய அம்மா கோமாவில் இருக்கிறார்!! மனம் வருந்தி கூறும் திவ்யா சரத்குமார்!!

Photo of author

By Gayathri

நடிகர் சத்யராஜ் மனைவி நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார் என மன வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் அவர்கள்.

தமிழ் சினிமா துறையில் வில்லனாக அடி எடுத்த வைத்த நபர் தான் சத்யராஜ். இப்பொழுது வரும் அனைத்து படங்களிலும் முக்கிய காப்பாத்திரங்களில் இவர் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இன்று இவருடைய கால் சீட் கிடைக்காமல்
பல இயக்குனர்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இவருடைய மகனான சிபிராஜ் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நல்ல கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொள்ள இன்று வரையில் முயற்சித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவருக்கு ஒரு மகன் மட்டும் இன்றி ஒரு மகளும் உள்ளார். சத்யராஜின் உடைய மகள் திவ்யா ஊட்டச்சத்தை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய அம்மா பற்றிய தகவல்களை தெரிந்துள்ளார்.

அதில் அவர் என்னுடைய தாயார் நான்காண்டுகளாக கோமாவில் உள்ளார் என்றும், அவருக்கு பிஜி குழாய் மூலம் தான் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமின்றி நடிகர் சத்யராஜ் அவர்கள் தான் சிங்கிள் பாரன்டாக இருந்து எங்களுக்கு ஒரு நல்ல அம்மாவாகவும் எங்களை வழிநடத்தி வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுவரை சத்யராஜ் அவர்களை திரைப்படங்கள் வாயிலாகவே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது.