தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு வழியினை உருவாக்கியவர் மற்றும் நடிப்பிற்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் பெயர் பெற்றவர் கருப்பு சுப்பையா. இவர் “ஜல்லிக்கட்டு” என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார்.
கருப்பு சுப்பையா தன்னுடைய தனித்துவமான காமெடி நடிப்பால் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்துள்ளார்.இவர் 300 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் சிறு வேடங்களிலும் நடித்தார்.
1960 கள் மற்றும் 1970 களில் சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது முதல் படம் 1962 இல் வெளிவந்த இந்திரா என் செல்வம் ஆகும். ஜம்பலகிடி பம்பா என்ற வசனத்துக்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.
80களில் மற்றும் 90களில் கவுண்டமணி உடன் செந்தில் சேர்ந்தால்தான் காமெடி கலைகட்டும் என்று கூறப்பட்ட நிலையில், செந்திலுக்கு இணையாக காமெடியில் களமிறங்கியவர் கருப்பு சுப்பையா. அந்த காலத்தில் இரண்டு சுப்பையா இருந்தனர். அதில் இவர் கருப்பாக இருந்ததால் இவருக்கு கருப்பு சுப்பையா என அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ‘கட்டபொம்மன்’ படத்தில் கவுண்டமணி அவருக்கு ஈயம் பூசும் சீனில், அவரது மேல் பெயிண்ட் பூசப்பட்டது. இவ்வாறு பூசப்பட்ட பெயிண்டால் உடல் வெப்பத்தால் வியர்வை வெளியேற முடியாமல், ரத்தத்தில் கழிவுகள் கலந்து, அடுத்த சில ஆண்டுகளில் அவர் தனது உயிரை இழந்தார். அந்த காட்சியில் நடிக்க அவர் 300 ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.