என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

Photo of author

By Sakthi

என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

Sakthi

Updated on:

என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் என் மண் என் மக்கள் பயணம் குறித்த முக்கியமான தகவல்களை அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் நடை பயணத்திற்கு என் மண் என் மக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி இந்த நடை பயணத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நடைபயணத்தை தள்ளி வைத்தார். இதையடுத்து அவர் தொடங்கவுள்ள என் மண் என் மக்கள் பயணத்தை பற்றி சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி என் மண் என் மக்கள் நடைப்பயணம் ஜூலை 9ம் தேதா ராமநாதபுரத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து 6 மாதம் இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து விரிவான தகவல்களை தருகிறேன் என்று தெரிவித்தார்.

என் மண் என் மக்கள் என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. திமழக பாஜக தலைவர் நடத்தும் இந்த நடை பயணத்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.