MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

Photo of author

By Rupa

MY V3 Ads நிறுவனமானது கோவையை தலைமை இடமாகக் கொண்டிருந்தாலும் இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தினந்தோறும் யூடியூபில் வீடியோ பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையை மக்களிடம் தூண்டியதன் மூலம் கிட்டத்தட்ட 9. 50 லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களில் சிலர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்யும் நேரத்தில் தங்களது நிறுவனத்தின் மீது பொய்ப் புகார் அளித்துள்ளதாக கூறி தங்களது நிர்வாகிகளை போராட்டத்திற்கு அழைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வழங்கி வந்த நபர் போலியான பட்டப்படிப்பு சான்றதல் வைத்திருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இந்த நிறுவனத்தின்மீது 2000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்கள் தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு தொடர்ந்து போலீசாரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆப் மூலம் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால் அதில் முதலீடு செய்யக்கூடாது என்றும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை போலீசார் வெளியிட்டனர்.

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் – My V3 Ads App removed from Play Store

இவ்வாறு இருக்கும் சூழலில் தற்பொழுது MY V3 Ads செயலியானது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மல்டிலெவல் மார்க்கெட்டிங் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளதால் நீக்கம் செய்துள்ளனர். இதனால் முதலீடு செய்த மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி முதலீடு செய்தவர்களின் பணம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.