சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பேட்டி ஒன்று தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் சினிமாவை விட்டு தான் விலக நினைத்தது குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் மனம் திறந்திருக்கிறார்.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தன் மனைவி குறித்து பேசி இருப்பதாவது :-
சினிமா துறையில் எங்கிருந்து யார் அம்பை விட்டு தாக்குவார்கள் என தெரியாது, எங்கிருந்து பிரச்சனை வருகின்றது என்பதே தெரியாது. பிரச்சனைகளால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு போகலாம் என்ற எண்ணம் வந்தபோது மனைவியிடம் தான் முதலில் கூறினேன்.
அவர் தான் சினிமாவை விட்டு போகக்கூடாது என்று சொன்னார், விலகாமல் நடித்துக் கொண்டிருப்பதற்கு எனது மனைவி ஆர்த்தி தான் காரணம் என தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் டிவியில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக ஆரம்பித்த தன்னுடைய பணியை தற்பொழுது தமிழ் சினிமா துறையில் சிறந்த கதாநாயகன் அளவிற்கு தன்னுடைய திறமையினால் உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சினிமா துறையில் தான் சந்தித்த கஷ்டமான தருணங்களில் தனக்கு சினிமா துறையை வேண்டாம் என முடிவெடுக்கும் மனநிலை இருந்ததை குறித்து தெளிவுபடுத்தும் விதமாக பதில் அளித்து இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.