Bangladesh: வங்க தேசத்தின் பிராந்தியங்களை கைப்பற்றிய மியான்மர் “ஆர்கன்” கிளர்ச்சிப் படை.
மேற்கு மியான்மர் ரக்கைன் மாநிலத்தில் ஆர்கன் என்ற பகுதி இருக்கிறது. இது வங்க தேசத்தின் எல்லைப் பகுதியில் அமைந்து இருக்கும் பகுதி ஆகும். 1780 ஆண்டு காலகட்டத்தில் ஆர்கன் பகுதி தனி ராஜ்ஜியமாக செயல்பட்டது. அதன் பிறகு 1784 ம் ஆண்டு மியான்மர் அரசு கட்டுப்பாட்டில் இந்த பகுதி இணைக்கப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளாக தனி நாடு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைமுகமாக செயல்பட்டு வந்தது “ஆர்கன் கிளர்ச்சிப் படை”.
இது கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித பெரிய செயல்பாடுகளிலும் ஈடுபட வில்லை. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மியான்மர் ராக்கைன் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தை துப்பாக்கி சூடு நடத்தியது. இச் சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மிகப் பெரிய கிளர்ச்சி படையாக ஆர்கன் படை உருவானது. கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவ மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்தது.
மேலும், இந்த ஆர்கன் அமைப்பு மியான்மரின் ரக்கைன், சின் என்ற பிராந்திய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வங்க தேசத்தில் அதிபர் ஹசீனா பதவியில் இருந்து விலக இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது வன்முறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்து அமைப்பான இஸ்கான் அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
வங்க தேசத்தில் நிலவும் அசாதாரண சூழலலை சாதகமாக பயன்படுத்தி மியன்மார் எல்லைப் பகுதியின் அருகில் உள்ள செயின் மார்டின் தீவு மற்றும் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களை மியான்மர் “ஆர்கன்” கிளர்ச்சிப் படை தன் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வந்துள்ளது. இந்த செயல் வங்கதேசத்திற்கு மிகப் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.