வயித்து பிள்ளையோட குத்தாட்டம் போடும் மைனா!!

Photo of author

By Parthipan K

வயித்து பிள்ளையோட குத்தாட்டம் போடும் மைனா!!

Parthipan K

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி நாடகத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார் மைனா என்ற நந்தினி.

மைனாவின் கிராமத்து பாணியிலான பேச்சு நடை, உடல் பாவனைகளினாலே  பட்டி தொட்டி எங்கும்  ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார்.

சின்னத்திரையை தாண்டியும் சினிமாவிலும்  சில படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இவருடைய சீமந்தம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது மீண்டும் வயித்து பிள்ளையோட சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடலுக்கு நின்றபடி கையசைத்து குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் காரசாரமாக கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.