ஈஷா யோகா மையத்திற்குச் சென்று பலர் காணாமல் போனதாக குற்ற சாட்டு எழுந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் அதனை விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் காவல் துறை காணாமல் போனவர்களை கண்டறிய முடியவில்லை என்று கூறி அதற்கான காரணம் என்ன என்று கூறியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வின் இருப்பிடம் என ஈஷா யோகா மைய நிர்வாகிகள் கூறுகின்றன. ஆனால் காவல் துறை விசாரணை வழக்கில் ஈஷா யோகா மையம் தகன மையாமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் ஈஷா யோகா மையத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் விற்க்காத, காலாவதியான மருந்துகள் செயல்ப்பாட்டில் உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மக்களின் பாதுகாப்பு குறித்து அங்கு பணியாற்றும் நிர்வாகிகளிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை மூலம் விடை தெரியாத மரணங்களை தவிர்க்க முடியும் என காவல் துறை நம்புகிறது. இந்த மனுவின் அடிப்படையில் காவல் துறை ஈஷா மையத்தில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு முறையாக செயல் பாடில்லை என தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் ஈஷா மைய வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.