கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்டார். சகோதரன் திருமண நிகழ்ச்சி நடைபெறும் முன் மாயமான என்ஜினீயர் தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரணியல் அருகே ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது சகோதரர் திருமண நிகழச்சியில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய அந்தோணிராஜ் வீட்டில் யாரிடமும் சரிவர பேசமால் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் காணப்பட்ட அந்தோணிராஜை அவரது பெற்றோர் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அந்தோணிராஜ் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானார்.
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை இரணியல் போலீசாரின் உதவியுடன் தேடிவந்த நிலையில் இரணியில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு வாலிபர் சடலம் கிடப்பதாக அந்தோணிராஜ் உறவினர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது, மருத்துவமனையில் இருந்து மாயமான அந்தோணிராஜ் உடல், தலை தனியாக முண்டமாக கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அந்தோணிராஜ் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்க அனுப்பிவைத்து. வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜ் மனஅழுத்தம் காரணமாக ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாரா?
அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரன் திருமண நிகழ்ச்சி நடைபெறும் முன் மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.