25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் – பாகிஸ்தான் நபரிடம் விசாரணை!

0
133
#image_title

கொச்சியில் 25 ஆயிரம் கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிடிபட்ட பாகிஸ்தான் நபரிடம் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை.

கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் 2800 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பிடிபட்ட பாகிஸ்தானை சேர்ந்த சுபாய்ர் என்கின்ற நபரிடம் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தற்போது விசாரணையை துவங்கி உள்ளனர்.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக 2800 கிலோ போதை பொருட்கள் கடல் வழியாக கடத்தி இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி எஸ் பி அரவிந்த் தலைமையிலான அதிகாரிகள் தற்பொழுது கப்பலில் பிடிபட்ட பாகிஸ்தானை சேர்ந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடத்திச் செல்லப்பட்ட போதைப் பொருட்கள் அனைத்தும் இலங்கையில் யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது என்கின்ற கோணத்திலும், இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்தும் தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.