தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

Photo of author

By Hasini

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

Hasini

Mysterious logo celebrity! Woe to the woman!

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக காதலிக்கிறேன் என்று கூறி பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களை நம்பி பெண்களும் மோசம் போகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் உமேஷ் என்ற 35 வயது நபர். இவர் தனது சொந்த ஊர் சிக்மகளூர் மாவட்டத்தில் கலசாபுரா  கிராமத்தில் வசித்து வந்தார். வேலை நிமித்தமாக இவர் பெங்களூருவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் சென்னராயப்பட்டனா என்ற ஊரில் இவருக்கும் பூர்ணிமா என்ற 24 வயதுடைய பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. அதன் காரணமாக அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உள்ளனர். எனவே அந்த பெண் கர்ப்பமுற்று இருக்கிறார். இதை அறிந்த சின்னத்திரை நடிகர் தற்போது குழந்தை வேண்டாம் என்றும், நான் நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அந்தப் பெண்ணோ இல்லை தற்போதே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதன் காரணமாக தனி வீடு எடுத்து தங்க வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். தற்போது பூர்ணிமாவிற்கு குழந்தை பிறந்த நிலையில், அந்த கைகுழந்தையை வைத்துக்கொண்டு உமேஷின் சொந்த வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த போலீசார் அங்கு வந்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பெண் கூறிய தகவல்களை வைத்து சிக்மகளூர் புறநகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கிருந்த அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.