வெடிபொருட்களுடன் இரவில் உலா வரும் மர்ம நபர்! அச்சத்தில் மக்கள்!

Photo of author

By Parthipan K

சீர்காழியில் பாஸ்பரஸ் போன்ற வெடி மருந்துகளுடன் மர்ம நபர் ஒருவர் இரவு நேரங்களில் சுற்றி திரிவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியின் விளந்திடசமுத்திரம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு கூரை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து வீட்டு உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

இந்நிலையில், காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டின் மீது பாஸ்பரஸ் உருண்டையை வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த மர்ம நபர் சீர்காழியின் பல தெருக்களில் வெடி மருந்துகளுடன் இரவில் உலா வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.