உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்கு முப்பத்தி இரண்டு குழந்தைகள் உட்பட முப்பத்தி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் கொரோனா ருத்ர தாண்டவம் இன்னும் முழுமையாக முடிவதற்கு முன்னரே உத்தர பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரத்தில் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காய்ச்சல் குறித்து விசாரணை செய்ய கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த காய்ச்சல் மணிப்புரி மற்றும் மதுரா மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நோயினால் ஏராளமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டங்களில் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.