பல நூறு ஆண்டுகளாக தொடரும் மர்மம்!! அந்த ஒரு பகுதியை கடக்கும் விமானங்கள் மட்டும் மாயம் ஆகிறது!!

பல நூறு ஆண்டுகளாக தொடரும் மர்மம்!! அந்த ஒரு பகுதியை கடக்கும் விமானங்கள் மட்டும் மாயம் ஆகிறது!!

உங்களில் பலருக்கும் பெர்முடா டிரையாங்கிள் உள்ள மர்மமான இடத்தைப் பற்றி தெரிந்திருக்கும். அந்தப் பகுதி கடல் வழி மற்றும் வான் வழிக்கும் எவ்வளவு ஆபத்து என்று தெரிந்திருக்கும். அந்த வகையில் கடல் வழி இல்லாமல் வான் வழிக்கு மட்டும் ஆபத்தான இடத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

லைவ் ஏர் டிராபிக் க்ளோபல் மேப்பில் இந்த உலகில் உள்ள எல்லா நாடுகளின் மேலேயும் விமானம் பறப்பதை காணலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மேலே மட்டும் விமானம் பறப்பதை பார்க்க முடியாது. ஏன் அந்த ஒரு இடத்திற்கு மட்டும் விமானம் பறப்பதை தடை செய்து வைத்துள்ளார்கள். அந்தப் பகுதியில் அப்படி என்ன உள்ளது என்று தெரியுமா. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் ஜப்பான் பயங்கரமாக கை ஓங்கியிருந்த அந்த சமயத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்த் அதாவது பிரிட்டன் நாட்டுக்காரர்கள் சீனாவிற்கு ஆறுதலாக இருந்து வந்தனர். இந்த நிலையில் ஜப்பானுக்கு எதிராக சீனாவை வெற்றிபெற வைக்க சில திட்டங்களை தீட்டி வந்தனர். இதற்காக இவர்கள் வான் வழி பாதையை உருவாக்கினர். அது ஜப்பானுக்கு எதிராக சீனாவிற்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் வான்வழி பாதையாக இருந்தது. இப்படி அவர்கள் தீவிரமாக உருவாக்கிய வழி தான் ஈஸ்ட் அண்டு இந்தியா. அதாவது தற்பொழுது இந்தியாவில் உள்ள ஆசாமிக்கு சொந்தமான இடங்களில் தான் அவர்கள் பயணத்திற்காக தேர்வு செய்தனர்.

அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த தடம் வான் வழி பயணம். ஏனென்றால் மற்ற வழிகளில் பயன்படுத்துவதை காட்டிலும் வான்வழிப் பயணத்தை மேற் கொள்வதால் தான் ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து சீனாவிற்கு எடுத்துச் செல்ல முடியும். அதனால் தான் அவர்கள் வான்வழி பயணத்தை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் 840 கிலோமீட்டர் தொலைவை கடக்கவே இந்த வான் வெளி பயணத்தை மேற்கொண்டனர். மேலும் இந்த வழியில் ஆயுதங்களை சீனாவிற்கு கொண்டு செல்லவும் ஆரம்பித்தனர். ஆனால் இது ஆரம்பித்த பிறகுதான் அந்த வழியில் உள்ள மர்மம் தெரியவந்தது. அது என்னவென்றால் இவர்கள் ஒவ்வொரு விமானமாக சீனாவிற்கு ஆயுதங்களை அனுப்பி கொண்டிருக்கும் பொழுது அந்த ஒவ்வொரு விமானமும் மர்மமான முறையில் மறைந்து போனதை கண்டுபிடிக்கிறார்கள். அப்படி ஏதாவது ஒரு விமானம் அவ்வழியே சீனாவை சென்றடைந்தால் விமான ஓட்டுனரிடம் கேட்டபொழுது அவர்கள் அங்கு நடக்கும் விடயம் அனைத்தும் மர்மமாக உள்ளது. மேலும் அவ்வழியே பயணம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்றும் கூறியுள்ளனர். இந்த ஒரு விடயம் பிரிட்டிஷ் நாட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சீனா மற்றும் ஜப்பான் இடையே ஏற்பட்ட போரும் முடிந்தது. அதன் பிறகு அந்த மர்மமான விமானத்தின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மேலும் இதை கணக்கிடும் பொழுது 42 மாதங்களில் 594 விமானங்கள் மர்மமாகி உள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும் இந்த 594 விமானங்களில் பயணித்த 1659 பயணிகளும் மர்மமான முறையில் மாயமாகி உள்ளனர் என்ற தகவலும் கிடைத்தது. அந்தப் போரில் சுடப்பட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை விட அந்த ஒரு மர்மமான இடத்தில் மாயமான விமானங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்ததைக் கண்டு அந்நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இந்த ஒரு விடயம் கூட இங்கிலாந்துக்கு மர்மமாக தான் அமைகிறது. ஆனால் இதற்கான காரணத்தை அவர்களால் கண்டறியவே முடியவில்லை. இதனால் அந்த ஒரு பகுதியை முழுவதுமாக தடை செய்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள். மேலும் இந்த மர்மம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தையும் தொடர்ந்து இந்த மாடர்ன் காலகட்டம் வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனால் இந்த பகுதிக்கு செல்லும் விமானங்களில் அந்தப் பகுதியை சுற்றி எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அந்த ஒரு பகுதியை மட்டும் உபயோகிக்க மறுத்து வருகின்றனர். இந்த ஒரு மர்மம் இதுவரையில் எதனால் என்பதை கண்டறிய படாமலே உள்ளது.

Leave a Comment