பல வருடங்களுக்கு பிறகு இணைந்த வடிவேலு- பிரபுதேவா… டான்ஸ் vibe-க்கு தயாரா?

Photo of author

By Vinoth

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

லைகா தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கடந்த இரண்டு வருடங்களாக பேசிவருகிறார். ஆனால், இந்த படத்தின் தலைப்பை அவர் முறையாக பதிவு செய்யவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இந்த படத்தில் ஒரு பாடலை பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். வடிவேலுவும் பிரபுதேவாவும் இணைந்து ஆடிய பல பாடல்கள் எவர்க்ரீன் ஹிட் பாடல்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் ப்ரமோஷனாக அந்த பாடல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அந்த பாடலில் வடிவேலுவின் அட்டகாசமான நடன அசைவுகளும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.