அக்கா குழந்தை.. கொஞ்சம் கூட பாக்கல கதற கதற சீரழிச்சாங்க!! நாம் தமிழர் சீமான் மீது பகீர் குற்றச்சாட்டு!!

Photo of author

By Rupa

 

 

 

NK Seeman: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சீமான் பதிலளித்ததற்கு நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரின் உறவானது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த வருடம் விஜயலட்சுமி, காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டு தனக்கே தெரியாமல் கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக சீமான் மீது வழக்கு தொடுத்தார். இது தொடர்பான செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்பொழுது வரை இருவருக்குமிடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. சமூக வலைதள பக்கத்தில் இருவரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் சாடி கொள்கின்றனர்.

அந்த வகையில் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கையானது தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிப்படையாக கூறும் வகையில் இது உள்ளது. மேலும், பல ஹீரோயின்கள் முன்வந்து தங்களுக்கு நேர்ந்த அசம்பாவிதங்கள் பற்றி கூறியும் வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு பத்திரிகையாளரும் ஹீரோ ஹீரோயின்களை பேட்டி எடுக்கும் பொழுது இந்த கமிட்டி குறித்த அறிக்கை பற்றி கேட்டு வருவதுண்டு.

அந்த வகையில் நேற்று நாம் தமிழர் கட்சி சீமான் இடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் சீமான் கூறியதாவது, சினிமா மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இருக்கத்தான் செய்கிறது என தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்பொழுது விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீமான் எனக்கு எதிராக எத்தனை பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை குறித்த சீமானிடம் கேள்வி எழுப்பியதற்கு, ஒன்றும் தெரியாததை போல், இந்த குழந்தையும் பால் குடிக்குமா என்ற அளவில் பதிலளித்துள்ளார்.அந்த நடிப்பை பார்த்து நான் மெய் சிலிர்த்து தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். எனது அக்காவின் குழந்தையை கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்று நான் கதறி அவர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு சென்ற பொழுது, அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அங்கேயே என்னை வைத்து கதற கதற சீரழித்தார்.

அதுமட்டுமின்றி 14 வருடம் ஒரு பெண்ணுடன் குடும்பத்தை நடத்தி அதனை மறுக்க முடியாமல் கர்நாடகாவிற்கு சென்ற கதையும் உள்ளது. இது எல்லாம் சாதாரணமாக மக்கள் மறந்து விட மாட்டார்கள். அவர் வழக்கில் பிணையில் இருக்கும் பொழுது கூட நான் தேவைப்பட்டேன். கடந்த ஆண்டு இவர் மீது புகார் கொடுத்த பொழுது அதனை திரும்ப பெற கோரி ஐம்பதாயிரம் கொடுத்தது மட்டுமின்றி, திமுக மற்றும் கயல்வலி முன்னாடி எதுவும் பேச வேண்டாம் என டீல் செய்தார்.

அப்பொழுதும் என்னை விடாமல் தொடர்ந்து ஏதேனும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்ததற்கு காவல்துறையிடம் முறையிட்டேன். அதற்கு ரிவர்ஸ் எடுக்கும் விதமாகத்தான் தொடர்ந்து திமுகவை என்னுடன் இணைத்து மேடை எங்கும் பேசினார். மேலும் எனக்கு ஆதரவு தெரிவித்த வீரலட்சுமி அவர்களையும் சேர்த்து கொச்சை கொச்சையாக பேசியதை அவ்வளவு சீக்கிரம் மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

அது மட்டுமா, நித்யானந்தா ஆசிரமத்தில் வெள்ளைக்கார பிகரா இருக்கு என்று கமெண்ட் செய்து பேசியது என தொடங்கி நான் வழக்கு தொடுத்ததால் தான் தனக்கு பொண்ணுங்க ஃபாலோவர்ஸ் அதிகமாகி இருக்குன்னு சொன்னது வரை மக்கள் மனதில் அப்படியே தான் இருக்கும். நீங்களெல்லாம் ஒழுக்கமானவர் என எண்ணி செய்தியாளர்கள் உங்களிடம் வந்து கேள்வி கேட்டார்கள் அல்லவா அவர்களைத்தான் சொல்ல வேண்டும்.

சீமான் ஒரு பெண்ணை காப்பாற்றுவார என்று கேட்டால் கட்டாயம் கிடையாது. தமிழகத்தில் உள்ள பெண்களை உங்களிடமிருந்து தான் காப்பாற்ற வேண்டும் என பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.