தமிழகத்திற்கு 40,000 கோடி கடனுதவி தரும் நபார்டு வங்கி!

Photo of author

By Kowsalya

நபார்டு வங்கியின் தலைவர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவரித்துள்ளார்.

அப்போது கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கும் நிதி உதவிகளை கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது . நடப்பு நிதியாண்டில் தமிழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் உதவி வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் நபார்டு வங்கியின் கடன் 27 ஆயிரத்து 40 கோடியாக இருந்தது. முக்கிய வாங்கி உயர் அதிகாரியான சிந்தாலா நேற்று தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்தின் அடிப்படையில் தான் நபார்டு வங்கிக்கும் எஸ்பிஐ வங்கி க்கும் இடையே சிந்தலா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, என்று சொல்லியுள்ளது. அதே போல நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் செல்வராஜ், எஸ்பிஐ தமிழக தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

விரைவில் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் கடனுதவி வழங்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.