தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Photo of author

By CineDesk

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

CineDesk

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கீதா என்ற தனி அதிகாரியை நேற்று நியமனம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் விஷால் இன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், நடிகர் சங்கம் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இந்த நியமனம் செல்லாது என்றும், தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் விஷாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்

இதன் பின்னர் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடுகையில் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி இருப்பதாகவும், நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் வெற்றிடம் இருப்பதால் தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டதாகவும் பதிலளித்தார்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனி அதிகாரி நியமன தடைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இது குறித்து தமிழக அரசு வரும் 14ஆம் தேதிக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்து உத்தரவிட்டார்

இன்றைய வழக்கின் விசாரணையில் எப்படியும் தனி அதிகாரி நியமனத்துக்கு இடைக்காலத் தடை கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நடிகர் விஷாலுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது