மீனவர் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நாக சைதன்யா!!! மீண்டும் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி!!! 

0
149
#image_title

மீனவர் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நாக சைதன்யா!!! மீண்டும் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி!!!

நடிகர் நாக சைதன்யா நடிக்கும் 23வது படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நடிகை சாய் பல்லவி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி மூலமாக தெரிவித்துள்ளார்.

கார்த்திகேயா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்து மொண்டேட்டி அவர்கள் நடிகர் நாக சைதன்யா நடிக்கவுள்ள 23வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். நடிகர் நாக சைதன்யா அவர்கள் நடிக்கும் 23வது படத்தில் மீனவர் கதாப்பாத்திரத்தில் நடிகர் நாக சைதன்யா அவர்கள் நடிக்கவுள்ளார்.

மீனவர்களை பற்றிய கதையாக என்எஸ்23 திரைப்படம் உருவாகவுள்ளது. கீதா ஆர்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். நாக சைதன்யா நடிக்கும் 23வது திரைப்படமான என்எஸ்23 திரைப்படத்தின் பிரி-புரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

நாக சைதன்யா நடிக்கும் 23வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்பொழுது நடிகை சாய் பல்லவி அவர்கள் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகை சாய் பல்லவி லவ் ஸ்டோரி என்னும் திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யா அவர்களுடன் நடித்திருந்தார்.

Previous articleசெந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!!
Next articleபாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?