செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!!

அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து 3000க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அந்த மனுவை யார் விசரிப்பது என்ற முறையில் முதலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் என்று மாறி மாறி சென்றது.பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதி அல்லி தலைமையிலான அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது.இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்பொழுது அரசியல் அழுத்தம் காரணமாக அதாவது பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாக தான் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளேன்.தான் சட்ட விரோதமாக பணம் பெற்றதாக கூறும் நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.தான் இத்தனை வருடங்களாக வருமானவரி செலுத்தி வருகிறேன்.அதை வைத்தே கண்டு பிடித்திருக்க முடியும்.இதில் இருந்தே நான் பண மோசடியில் ஈடுபடவில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் எனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.எனவே அதனை கருத்தில் கொண்டு தன்னை விடுவிக்க வேண்டும்.ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை முழுமையாக விசாரித்து விட்டதால் எந்த ஒரு சாட்சியமும் கிடைக்க வாய்ப்பு இல்லை.தன்னை இந்த கோர்ட் விடுவித்த பின்னர் தான் தன்னுடைய பாஸ் போர்ட்டை ஒப்படைக்க கூட தயாராக உள்ளேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜியை விடுவிக்க கூடாதென்று அமலாக்கத்துறை தரப்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.தொடர்ந்து 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி அவர்கள் செந்தில் பாலாஜி பணமோசடி செய்த ஆவணங்களை எரித்து இருக்கலாம்.ஆனால் டிஜிட்டல் ஆதாரங்களை எப்படி அழிக்க முடியும்? என்று சரமாரியான கேள்விகளை எழுப்பி செந்தில் பாலாஜி தரப்பை அதிர வைத்தார்.இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி,பின்னர் இது குறித்த எழுத்து பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்து விடுமென்று நினைத்து கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு நீதிபதி அளித்த தீர்ப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.