திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா! அப்போ சமந்தா வாழ்க்கை? ரசிகர்கள் கவலை!

0
38
#image_title

திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா! அப்போ சமந்தா வாழ்க்கை? ரசிகர்கள் கவலை!

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நாக சைதன்யா.இவரும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘யே மாய சேசாவே’ படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்நிலையில் வெறும் 4 ஆண்டுகளில் இவர்களின் திருமண வாழ்க்கை முடிக்கு வந்தது.கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று விட்டனர்.இதனை தொடர்ந்து சமந்தா,நாக சைதன்யா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அவர் திருமணம் செய்ய உள்ள பெண் பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மீண்டும் நாக சைதன்யா,சமந்தா இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நாக சைதன்யா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.