நாகை – இலங்கை படகு போக்குவரத்து!!! நேற்று தொடங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது!!! 

Photo of author

By Sakthi

நாகை – இலங்கை படகு போக்குவரத்து!!! நேற்று தொடங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது!!!
நாகை மற்றும் இலங்கைக்கு இடையே நேற்று(அக்டோபர்14) படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் இன்று(அக்டோபர்15) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசான் துறைமுகத்திற்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னரே படகுப் போக்குவரத்து செயல்பட்டு வந்தது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்டதால் படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாகை மற்றும் இலங்கைக்கு இடையே படகுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு மத்திய அரசு 3 கேடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து மத்திய அரசு ஒதுக்கிய நிதியை வைத்து  தமிழக அரசு மூலம் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  இதையடுத்து கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து செரியாபாணி என்ற கப்பல் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் செரியாபாணி கப்பல் மூலம் சாதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று(அக்டோபர்14) முதல் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதன் படி நேற்று(அக்டோபர்14) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக நாகை முதல் இலங்கை வரையிலான படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று(அக்டோபர்15) படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது புதிய அளவு பயணிகள் முன்பதிவு செய்யாத காரணத்தினால் நாகை மற்றும் இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து இன்று(அக்டோபர்15) இரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் நாகை முதல் இலங்கை காங்கேசான் வரை இயக்கப்படும் கப்பல் போக்குவரத்து இனிமேல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.