தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழச்சிகளில் கலந்துக்கொள்ள நாகாலாந்து கவர்னர் மற்றும் மொரீஷியஸ் அதிபர் வருகை!!

0
239
#image_title

தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழச்சிகளில் கலந்துக்கொள்ள நாகாலாந்து கவர்னர் மற்றும் மொரீஷியஸ் அதிபர் வருகை!!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாகலாந்து மாநில கவர்னர் இல கணேசன் மற்றும் மொரிசியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தனர்.

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மொரிசிஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் மற்றும் நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கினார்.

பின்னர் மொரிசியஸ் நாட்டு அதிபர் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி புறப்பட்டு சென்றார். நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து இன்று மாலை தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியாவின் முன்னேற்றம் என்ற தலைப்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் கலந்து கொள்ள உள்ளார்.

Previous articleஎடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!
Next article7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!