நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

0
215

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

நாகலிங்கப்பூ இதுவே கடவுள் என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்தப் பூவுக்குள்ளே தான் இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். குறிப்பாக இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.அது குறித்த சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.

அந்தப் பூவில் நாகமிருக்கிறது உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றனர். உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று நோக்கினால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.

ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும்.சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது. பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது.

விசேஷத்திலும் திருவிழாவாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று ஒரு தனியிடம் ஏற்படுத்தி பூக்கிறது.

நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாது. என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்கிறது.

ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.

அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளிலிருந்து காக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துகிறது.

நம் கடன் நீக்கி வல்லமை தரும், இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை சாப்பிடுவதால் பல்வலிக்கு மருந்தாகவும்,பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷத்துக்கு மருந்தாகுவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

Previous articleஅரசியலில் களமிறங்கும் நடிகர் விஷால்! அவருக்கு ஆதரவாக முக்கிய அரசியல் பிரபலம்
Next articleபச்சையாக இருந்தாலும் பல பிரச்சனைகளை எளிதில் மாற்றக்கூடிய சிறந்த மூலிகை அருகம்புல் ஜூஸ்!!